“இது அதே ஆளு தானா…?! சலூனுக்குள் நுழைந்த 40 வயது நபர்… வெளியே வந்த போது காத்திருந்த பேரதிர்ச்சி..! இணையத்தை கலக்கும் 2.4 கோடி பார்வைகள் பெற்ற பிரம்மாண்ட மேக்ஓவர்..!!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இது அதே ஆளு தானா…?! சலூனுக்குள் நுழைந்த 40 வயது நபர்… வெளியே வந்த போது காத்திருந்த பேரதிர்ச்சி..! இணையத்தை கலக்கும் 2.4 கோடி பார்வைகள் பெற்ற பிரம்மாண்ட மேக்ஓவர்..!!”

Published

on

பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த 40 வயது நபர் ஒருவருக்கு, விரைவில் நடக்கவிருந்த ஒரு பார்ட்டியில் பங்கேற்க வேண்டியிருந்தது. அந்த பார்ட்டிக்குச் செல்லும்போது அனைவரது பார்வையும் தன் மீது மட்டுமே இருக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது. இதனால் தனது தோற்றத்தை முற்றிலும் மாற்றிக்கொள்ள முடிவெடுத்த அவர், சுமார் 285 கிலோமீட்டர் பயணம் செய்து உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ‘கப்ரூ’ என்ற சலூனுக்குச் சென்றார். அங்குள்ள ஸ்டைலிஸ்ட்டிடம், தான் பார்ட்டியில் மிகவும் இளமையாகவும் ஸ்டைலாகவும் மாற வேண்டும் என்றும், நகைச்சுவையாக “என்னை 24-25 வயது இளைஞன் போல மாற்றிவிடுங்கள்” என்றும் கூறினார்.

https://www.instagram.com/reel/DcLCb3KvZdV/?utm_source=ig_web_button_share_sheet

Advertisement

சலூன் ஸ்டைலிஸ்ட் உடனடியாக அவரது மேக்ஓவர் பணிகளைத் தொடங்கினார். முதலில் அவரது முடியை அவருக்குப் பிடித்த சுருட்டை முடி பாணியில் அமைத்து, இளமையான தோற்றம் தருவதற்காகச் சிறப்பு வண்ணமும் பூசினர். அதேபோல நரைத்திருந்த அவரது தாடிக்கும் வண்ணம் பூசப்பட்டது. மேலும் முகத்திற்குப் பொலிவு தரும் வகையில் மசாஜ் உள்ளிட்ட பல்வேறு ஃபேஷியல் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. முழுமையான மேக்ஓவர் முடிந்து கண்ணாடி முன் நின்றபோது, அங்கு இருந்த அனைவரும் அவரது புதிய தோற்றத்தைக் கண்டு வியந்து போயினர்.

மேக்ஓவருக்குப் பிறகு அவர் முற்றிலும் வேறு ஒரு நபரைப் போலக் காட்சியளித்தார். அவரது புதிய ஹேர் ஸ்டைல், தாடியின் நிறம் மற்றும் முகத்தின் பொலிவு ஆகியவை அவரை அடையாளம் காண முடியாத அளவுக்கு மாற்றியிருந்தன. அந்த நபருக்குத் தனது புதிய தோற்றம் மிகவும் பிடித்துப் போனதால், சலூன் நிர்வாகம் அதனை வீடியோவாகப் பதிவு செய்து ‘the_styling_gabru’ என்ற தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தது. சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவிய இந்த வீடியோவை இதுவரை 2.4 கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டு ஆச்சரியமடைந்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in