LATEST NEWS
“எங்ககிட்ட காரே இல்ல… அவங்ககிட்ட 14 கார்..!” கனிமொழியின் கார்களை காட்டி ஆதவ் அர்ஜுனா நடத்திய அதிரடி அட்டாக்..!!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியான த.வெ.க மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அரசு வாகன சலுகை குறித்த புதிய விவாதம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் விஜய் சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் தொகுதிப் பணிக்காக புதிய அரசு கார்களும், அவற்றின் பராமரிப்பிற்காக மாதந்தோறும் ரூ.75,000 படிகளும் வழங்கப்படும் என அறிவித்ததை, மாநிலத்தின் தற்போதைய நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான திமுக உறுப்பினர்கள் முற்றிலுமாக நிராகரித்துள்ளனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய த.வெ.க அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இந்த வசதியை ஆடம்பரமாகக் கருதாமல், தொகுதி மக்களுக்குச் தடையின்றிச் சேவையாற்ற உதவும் அத்தியாவசியத் தேவையாகப் பார்க்க வேண்டும் என வலியுறுத்தினார். குறிப்பாக, தங்களது கட்சியின் 35 எம்.எல்.ஏ-க்களிடம் சொந்த வாகனம் கூட இல்லாத எளிய பின்னணியைக் கொண்டவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், கனிமொழி போன்ற மூத்த தலைவர்களிடம் 14 கார்கள் வரை இருக்கும் சொத்து விவரங்களை ஒப்பிட்டு, எளிய மக்கள் பிரதிநிதிகளுக்கு இத்திட்டம் எவ்வளவு முக்கியம் என வாதிட்டார். அதேநேரம், திமுக தரப்பில் K.N. நேரு மற்றும் E.V. வேலு ஆகியோர் நிதி நிலைமையை மட்டுமே முன்னிறுத்தி இதனை மறுப்பதாகக் கூறியுள்ள நிலையில், இந்தச் சலுகையைத் தகுதியுள்ள எளிய உறுப்பினர்களுக்கு மட்டும் முறைப்படுத்தி வழங்கலாம் என்ற மாற்று யோசனைகளும் தற்போதைய தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
