FLASH: பெரும் பரபரப்பு..! கூலிப்படையை ஏவி மகளின் காதலனை கொன்ற தவெக நிர்வாகி.. தமிழகத்தை உலுக்கிய பயங்கரம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

FLASH: பெரும் பரபரப்பு..! கூலிப்படையை ஏவி மகளின் காதலனை கொன்ற தவெக நிர்வாகி.. தமிழகத்தை உலுக்கிய பயங்கரம்..!!

Published

on

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே தையூரில், தனது மகளைக் காதலித்த பிரவீன் (22) என்ற இளைஞரைக் கூலிப்படை ஏவிக் கொலை செய்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஏழுமலை என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். பிரவீனும் அந்தப் பெண்ணும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், அவர்களுக்கு இடையே இருந்த பொருளாதார அந்தஸ்து வேறுபாடு காரணமாகவே இந்த ஆவணக் கொலை அரங்கேற்றப்பட்டுள்ளதாகப் பிரவீனின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த கொடூரக் கொலையைக் கண்டித்தும், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் பிரவீனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியில் ஆவேசமாகச் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இந்த கொலை வழக்கு தொடர்பாகப் பெண்ணின் சகோதரர் கவுதம் உட்பட 4 பேரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த கொடூரக் குற்றத்திற்குத் துணையாக இருந்து கொலையை அரங்கேற்றிய கூலிப்படையின் தலைவனான சதீஷ் என்பவரைப் பிடிப்பதற்காகப் போலீசார் தனிப்படைகள் அமைத்துத் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in