“எவ்ளோ சொன்னாலும் திருந்தவே மாட்டீங்களா..?” முதல்வரின் எச்சரிக்கையை மீறிய தவெக நிர்வாகி… செம கடுப்பில் விஜய்… பாயும் அதிரடி நடவடிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எவ்ளோ சொன்னாலும் திருந்தவே மாட்டீங்களா..?” முதல்வரின் எச்சரிக்கையை மீறிய தவெக நிர்வாகி… செம கடுப்பில் விஜய்… பாயும் அதிரடி நடவடிக்கை..!!

Published

on

முதலமைச்சர் விஜய் அவர்களின் நேரடி உத்தரவையும் மீறி, அரசு நிறுவனங்களில் தவெக நிர்வாகிகள் அத்துமீறி ஆய்வு செய்திருப்பது கட்சிக்குள்ளும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகள் மற்றும் அரசு சார்ந்த பொது அலுவலகங்களுக்குள் தவெகவினர் தேவையின்றி நுழைந்து ஆய்வு செய்யக் கூடாது என்றும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஏற்கனவே எச்சரித்திருந்தார்.

இந்தச் சூழலில், விருதுநகர் மற்றும் சிவகாசி பகுதிகளில் அமைந்துள்ள மாநகராட்சி நூலகங்கள் மற்றும் அறிவுசார் மையங்களில் தவெக நிர்வாகி விக்னேஷ்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன. தலைமை இட்ட கட்டளையை முற்றிலும் உதாசீனப்படுத்தி, அங்கு அவர் ஆய்வு நடத்தியது மட்டுமின்றி, அதனை சமூக வலைதளப் பக்கங்களில் பதிவேற்றியதும் விமர்சனங்களை வலுக்கச் செய்துள்ளது.

Advertisement

கட்சியின் கட்டுப்பாட்டையும், முதலமைச்சரின் உத்தரவையும் மீறிச் செயல்பட்டதால், நிர்வாகி விக்னேஷ்குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. ஏற்கனவே இதேபோன்று விதிமீறல்களில் ஈடுபட்ட நிர்வாகிகள் மீது தவெக தலைமை உடனடியாகப் பதவிநீக்கம் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளதால், இந்த விவகாரத்திலும் தலைமை கடுமையான முடிவை எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in