என் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது என தடுமாறி நின்றபோது.. என்னை அமைச்சராக்கி அழகு பார்த்தவர்… சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் குறித்து செங்கோட்டையன் உருக்கம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

என் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது என தடுமாறி நின்றபோது.. என்னை அமைச்சராக்கி அழகு பார்த்தவர்… சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் குறித்து செங்கோட்டையன் உருக்கம்..!!

Published

on

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்துப் பேசிய உருக்கமான பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டதோ என்று தான் தடுமாறிக் கொண்டிருந்த கடினமான சூழ்நிலையில், தன்னைத் தூக்கிப்பிடித்து சட்டமன்ற உறுப்பினராக்கியவர் விஜய் என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தன்னை வருவாய்த்துறை அமைச்சராக்கி அழகு பார்த்த பெருமை முதலமைச்சர் விஜய்யையே சேரும் என்றும் செங்கோட்டையன் பெருமிதத்துடன் சட்டப்பேரவையில் உரையாற்றியுள்ளார். “அவர்தான் என்றைக்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சர்” என்று அவர் குறிப்பிட்ட போது, அருகில் அமர்ந்திருந்த முதலமைச்சர் விஜய் அதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்த காட்சிகள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in