#BREAKING: மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் இந்து சமய அறநிலையத்துறை அரசியல் செய்துள்ளது – உயர் நீதிமன்றம் கடும் விமர்சனம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

#BREAKING: மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் இந்து சமய அறநிலையத்துறை அரசியல் செய்துள்ளது – உயர் நீதிமன்றம் கடும் விமர்சனம்..!!

Published

on

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா அழைப்பிதழில் அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி இந்த அறங்காவலர் குழுவின் தலைவராக இருக்கும் நிலையில், உறுப்பினர்களின் பெயர்கள் ஏன் விடுக்கப்பட்டன என்பது குறித்து வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, ஆன்மிக மற்றும் பாரம்பரிய நிகழ்வுகளில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்றும், கோயில் விழாவை அரசியல் கருவியாக்குவது தவறு என்றும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், குடமுழுக்கு விழாவுக்காக அச்சிடப்படும் கல்வெட்டுகளில் அறங்காவலர் குழுவினரின் பெயர்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றக் கிளை, இந்து சமய அறநிலையத்துறைக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன், இந்த அழைப்பிதழை அறங்காவலர்களின் பெயர்கள் இன்றி அச்சிட்டது யார், அதற்கு அனுமதி வழங்கியது யார் என்பது குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு கோயில் இணை ஆணையருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in