“அடச்சீ நீங்கெல்லாம் மனுஷங்களா..?” பெற்ற தாய்-தந்தையை நடுரோட்டில் அடித்த கொடூர மகன்கள்… நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடச்சீ நீங்கெல்லாம் மனுஷங்களா..?” பெற்ற தாய்-தந்தையை நடுரோட்டில் அடித்த கொடூர மகன்கள்… நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வீடியோ..!!

Published

on

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தின் இந்தாப்பூர் பகுதியில், தங்களது தாயின் பெயரில் இருந்த நிலத்தை விற்ற விவகாரம் தொடர்பாக, 65 வயது முதிய தந்தை மற்றும் தாயைக் காரில் வந்து வழிமறித்துக் கட்டையால் கொடூரமாகத் தாக்கிய இரு மகன்கள் மீது காவல்துறையினர் அதிரடியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி மாலை 6 மணியளவில் இந்தாப்பூர் தாலுகாவிற்கு உட்பட்ட தரங்வாடி கிராம எல்லைக்குள் இந்த அராஜகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தாப்பூர் சரஸ்வதிநகரைச் சேர்ந்த துக்காராம் கிசான் ராவத் (65) மற்றும் அவரது மனைவி அஞ்சனா ஆகியோர் தார் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவர்களது மகன்களான சஞ்சய் துக்காராம் ராவத் மற்றும் ராஜேந்திர துக்காராம் ராவத் ஆகிய இருவரும் டாடா நெக்ஸான் காரில் அசுர வேகத்தில் வந்து தங்களது பெற்றோரைக் கொடூரமாக வழிமறித்துள்ளனர்.

https://twitter.com/nextminutenews7/status/2095080860202492368/video/1

Advertisement

அஞ்சனாவின் பெயரில் இருந்த நிலத்தை ஏன் விற்றீர்கள் என்று கேட்டுப் பெற்றோரைக் காரில் இருந்து இறங்கிய மகன்கள் இருவரும் நடுரோட்டில் வைத்து அசிங்கமாக வறுத்தெடுத்துள்ளனர். ஆத்திரம் அடங்காத அந்தப் பாசக்கார மகன்கள், தங்களது கையில் வைத்திருந்த மரக்கட்டையால் முதிய தம்பதியினரைச் சரமாரியாக அடித்துத் துவம்சம் செய்ததோடு, விற்ற நிலத்தை உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால் தங்களது உண்மையான பவர் என்னவென்று காட்டிவிடுவோம் என்று கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். காயமடைந்த தந்தை துக்காராம் ராவத் அளித்த அதிரடிப் புகாரின் பேரில், இந்தாப்பூர் காவல்துறையினர் பெற்றோரைக் கட்டையால் அடித்த சஞ்சய் மற்றும் ராஜேந்திரா ஆகிய இரு மகன்கள் மீதும் பல கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in