LATEST NEWS
கண்ணீர்..! “அவரு உயிரோட தான் இருக்காரு” நேபாள மரண வெள்ளத்தில் இருந்து உயிர் தப்பி வந்த கணவன்.. பார்த்ததும் மனைவி செய்த செயல்.. காண்போர் கண்களை ககுளமாக்கும் வீடியோ..!
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கொடூரமான திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி, பல நாட்கள் காணாமல் போயிருந்த இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், பத்திரமாக உயிர் தப்பித் தனது வீட்டிற்குத் திரும்பிய நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது . நேபாளத்திற்கு ஆன்மீகப் பயணம் சென்றிருந்த அந்த நபர், வெள்ளப் பேரழிவில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து வீடு திரும்பியதும், அவரது முகம் கண்ட அவரது மனைவி நெகிழ்ச்சி தாங்காமல் கண்ணீர் விட்டு அழுது அவரைக்கட்டி அணைத்துக் கொண்டார் .
https://twitter.com/iNikhilsaini/status/2095020352141492520/video/1
இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக உருவான இந்த கோரமான இயற்கைச் சீற்றத்தினால், நேபாளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 1,100-ஐத் தாண்டியுள்ளது . மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் இன்னமும் தேடப்பட்டு வரும் நிலையில், இத்தகைய பெரும் பேரழிவிலிருந்து மீண்டு குடும்பத்தினருடன் இணையும் மனிதர்களின் கதைகள் பார்ப்போரின் கண்களைக் குளமாக்குகின்றன
