மீண்டும் கோரத் தாண்டவம் ஆடும் இயற்கை… கருப்பு நிறத்தில் பொங்கி எழும் ஆற்றுநீர்..! அலறியடித்து வெளியேறும் மக்கள்… நேபாளத்தில் மீண்டும் பெருக்கெடுக்கும் வெள்ளம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மீண்டும் கோரத் தாண்டவம் ஆடும் இயற்கை… கருப்பு நிறத்தில் பொங்கி எழும் ஆற்றுநீர்..! அலறியடித்து வெளியேறும் மக்கள்… நேபாளத்தில் மீண்டும் பெருக்கெடுக்கும் வெள்ளம்..!!

Published

on

காத்மண்டு: நேபாளத்தில் புத்தி கண்டகி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, பொதுமக்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபற்றி தேசிய பேரிடர் ஆபத்து குறைப்பு மற்றும் மேலாண் கழகம் வெளியிட்ட செய்தியில், புத்தி கண்டகி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் அதனால், திரிசூலி தோபன் பகுதி வரை வெள்ளம் பாய கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனே வெளியேறும்படி எச்சரித்து உள்ளது. உயரம் குறைந்த பகுதிகளில் இருந்து வெளியேறி அதிக உயரம் உள்ள பகுதிகளுக்கு செல்லும்படி அறிவுறுத்தல் அளிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆகஸ்டில் நேபாளத்தில் ஆகஸ்டு மாதம் பெருவெள்ளம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், இந்த எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

பெருவெள்ளம் நேபாள-திபெத் எல்லைக்கு அருகே கடந்த ஆகஸ்டு 26-ந்தேதி இமயமலை பிராந்தியத்தில் திடீரென்று பனிப்பாறை உடைந்து போடேகோஷி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் மத்திய மற்றும் வடக்கு நேபாளத்தில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டன. பெருவெள்ளத்துடன் வந்த சேறும், சகதியும் உள்கட்டமைப்புகளை முற்றிலும் சீரழித்தன. இந்த துயர சம்பவத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். இந்த எண்ணிக்கை 1,453 என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. எனினும், அவர்களில் 112 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

Advertisement

இதுவரை 13,795 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 1,113 பேர் 21 மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். தவிர திபெத்தில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 43 பேர் பலியாகி இருந்தனர். 500-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என சீன ஊடகம் தெரிவித்தது. இந்த சூழலில், புத்தி கண்டகி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆற்றில் இருந்து கருப்பு நிறத்தில், சேறு கலந்த நீர் வெளியேறி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in