பெத்த மனசு எவ்ளோ பாடுபடும்..? சொத்துக்காக பெற்ற பெற்றோரையே மரக்கட்டையால் அடித்த கொடூர மகன்கள்… புனேயில் நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

பெத்த மனசு எவ்ளோ பாடுபடும்..? சொத்துக்காக பெற்ற பெற்றோரையே மரக்கட்டையால் அடித்த கொடூர மகன்கள்… புனேயில் நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ..!!

Published

on

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் இந்தாப்பூரில், நிலத்தகராறு காரணமாக பெற்ற பெற்றோரையே பெற்ற மகன்கள் மரக்கட்டையால் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய் அஞ்சனா ராவத் பெயரில் இருந்த நிலத்தை விற்றது தொடர்பாக எழுந்த தகராறில், 65 வயதான விவசாயி துக்காராம் கிசான் ராவத் மற்றும் அவரது மனைவி அஞ்சனா ராவத் ஆகிய இருவரையும் அவர்களின் மகன்களான சஞ்சய் துக்காராம் ராவத் மற்றும் ராஜேந்திர துக்காராம் ராவத் ஆகிய இருவரும் நடுரோட்டில் மரக்கட்டைகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி மாலை 6 முதல் 6.30 மணியளவில் இந்தாப்பூர் தாரங்வாடி பகுதி அருகே உள்ள சலீம் லான்ஸ் பகுதியில் பெற்றோர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, மகன்கள் இருவரும் ‘டாடா நெக்ஸான்’ காரில் வந்து அவர்களை வழிமறித்துள்ளனர். தாயின் பெயரில் இருந்த நிலத்தை ஏன் விற்றீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட மகன்கள், விற்ற நிலத்தை மீண்டும் மீட்டுத் தர வேண்டும் என மிரட்டி, மரக்கட்டைகளால் இருவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

Advertisement

இந்தத் தாக்குதலில் தந்தை துக்காராமின் முதுகு, முகம், தொடைகள் மற்றும் இடது தோள்பட்டையில் பலத்த காயங்களும், தாய் அஞ்சனாவின் வலது மணிக்கட்டு மற்றும் இடுப்புப் பகுதியில் காயங்களும் ஏற்பட்டன. சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் கூடியதை அடுத்து, காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காயமடைந்த பெற்றோர் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தந்தை துக்காராம் அளித்த புகாரின் பேரில், இந்தாப்பூர் காவல் துறையினர் இரு மகன்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்; மேலும், இந்த கொடூரத் தாக்குதல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in