LATEST NEWS
“ஆத்தாடி.. சங்குக்குள்ள இப்படி ஒரு கொடூர உருவமா..?! நத்தைனு நினைச்சு கையில எடுத்த பொண்ணு… டக்குனு எட்டிப் பார்த்த அந்த விசித்திர நண்டு..! வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!”
இ-ரிக்ஷாவில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் ஒருவரின் கையில் இருந்த சங்குக்குள் ஒரு கருமையான உயிரி இருந்தது. அதை முதலில் சாதாரண ‘நத்தை’என்று கருதிய அனைவரும், அது மெதுவாகத் தனது உடலை வெளியே நீட்டியபோது அதிர்ச்சியடைந்தனர். அந்த உயிரினத்திற்குப் பலமான கால்களும் கொடுக்குகளும் இருந்ததால், அது நத்தை அல்ல; மாறாக சங்குக்குள் அடைக்கலமாகியிருந்த ஒரு ‘ஹெர்மிட் கிராப்’ எனப்படும் துறவி நண்டு என்பது தெரியவந்தது. இந்த நண்டுகள் தங்கள் மென்மையான உடலைப் பாதுகாத்துக் கொள்ள, கடலில் உள்ள காலியான சங்குகள் அல்லது சிப்பிகளைத் தங்களது வீடாகப் பயன்படுத்திக் கொள்ளும் இயல்புடையவை.
இந்த நண்டுகளின் வாழ்க்கைச் சுழற்சியும் வாழும் முறையும் மிகவும் தனித்துவம் வாய்ந்தது. பெண் துறவி நண்டுகள் கடலில் பல்லாயிரக்கணக்கான முட்டைகளை இடுகின்றன; அவற்றிலிருந்து வெளிவரும் சிறிய உயிரினங்கள் கடலில் உள்ள நுண்உயிரிகளை உண்டு வளர்ந்து நண்டுகளாக மாறுகின்றன. இவை வளர வளர, பழைய சங்கை விட்டுவிட்டுத் தனது உடலுக்கு ஏற்பப் பெரிய சங்குகளுக்கு மாறிக் கொண்டே இருக்கும். மேலும், இவற்றால் நீந்த முடியாது என்பதால், அலையின் போக்கிலேயே அடித்துச் செல்லப்பட்டு வாழ்கின்றன.
https://www.instagram.com/reel/DaAlGPopdgt/?utm_source=ig_web_button_share_sheet
இன்ஸ்டாகிராமில் ‘பம்பா தாலுக்தார்’ என்பவர் பகிர்ந்த இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த இணையதள பயனர்கள் பலரும், “அதைச் சாதாரண நத்தை என்று நினைத்து அலட்சியமாகப் பிடிக்க வேண்டாம், நண்டுகள் கூர்மையான நகங்களால் கடித்துக் காயப்படுத்தக்கூடும்” என்று அந்தப் பெண்ணுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ஆபத்தை உணர்ந்தால் மட்டுமே இவை சுய பாதுகாப்புக்காகத் தாக்கும். இருப்பினும், இந்தத் துறவி நண்டுகள் விஷத்தன்மை அற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
