LATEST NEWS
“மரண விளிம்பில் சொர்க்கம், நரகத்தைக் கண்டேன்” 7 வயது மகனைப் பறி கொடுத்துவிட்டு… இன்று கோடீஸ்வரரியான தாயின் மெய்சிலிர்க்க வைக்கும் கதை..!!
1967-ஆம் ஆண்டில் நடந்த ஒரு கொடூரமான கார் விபத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த கேட் டன்கல் என்பவரின் 7 வயது மகன் மார்க் உயிரிழந்தான். இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து அவரது தந்தை காலமானார்; மேலும் அவர் வங்கியிலும் திவாலாகி வீடற்ற நிலைக்குத் தள்ளப்பட்டார். அடுத்தடுத்து ஏற்பட்ட இந்தத் தொடர் இழப்புகளால் மனம் உடைந்த கேட், கடவுள் மீதிருந்த நம்பிக்கையை முற்றிலும் இழந்து அவர் மீது கடும் வெறுப்பைக் கொண்டிருந்தார்.
அதன்பின் கேட் மீண்டும் ஒரு தீவிர கார் விபத்தில் சிக்கியபோது, உடலுக்குள் ஏற்பட்ட அதிக இரத்தப்போக்கு காரணமாக மயக்கமடைந்து மரணத்தின் விளிம்பிற்குச் சென்றார். அந்த நேரத்தில், தான் ஒரு இருண்ட சுரங்கம் வழியாக விண்வெளி மற்றும் காலத்தைக் கடந்து பயணிப்பது போன்ற உணர்வைப் பெற்றார். அங்கே அமைதி நிறைந்த ‘சொர்க்கத்தை’ கண்ட அவர், தொடர்ந்து அலறும் ஆன்மாக்கள் நிறைந்த எரியும் குழி போன்ற ‘நரகத்தையும்’ தரிசித்ததாகக் கூறுகிறார். இந்த பயங்கரமான அனுபவத்திற்குப் பிறகு கடவுளிடம் மன்னிப்பு கேட்ட கணமே, “மக்களை இறைவனிடம் வழிநடத்த வேண்டும்” என்ற அசரீரியைக் கேட்டு அவர் மீண்டும் சுயநினைவுக்குத் திரும்பினார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த பிறகு, கேட்டிற்கு வாழ்க்கையின் மீதான பார்வையே முற்றிலும் மாறியது. அவருக்கு வந்த ஒரு கனவின் தூண்டுதலால் ஒரு ஆலோசன நிறுவனத்தைத் தொடங்கினார். தொழில் வெற்றிகரமாக அமைந்ததில், 83 வயதான கேட் இன்று ஒரு கோடீஸ்வரராக திகழ்கிறார். “மரணம் என்பது முடிவல்ல; அது மனிதனின் கர்மாவுக்கு ஏற்ப அமையும் அடுத்தகட்ட பயணம்” என்ற செய்தியை அவர் உலகுக்கு முன்வைக்கிறார்.
