அம்மாடியோ பார்த்தாலே நடுங்குதே..! சுற்றிலும் நெளியும் நிஜப் பாம்புகள்… நடுவே அசால்ட்டாகப் Snakes and Ladders கேம் விளையாடும் நபர்… நெஞ்சை பதறவைக்கும் பகீர் வீடியோ..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அம்மாடியோ பார்த்தாலே நடுங்குதே..! சுற்றிலும் நெளியும் நிஜப் பாம்புகள்… நடுவே அசால்ட்டாகப் Snakes and Ladders கேம் விளையாடும் நபர்… நெஞ்சை பதறவைக்கும் பகீர் வீடியோ..!

Published

on

சிறுவயதில் நாம் அனைவரும் தாயம் மற்றும் பரமபதம் (Snakes and Ladders) விளையாடி மகிழ்ந்திருப்போம். ஆனால், இங்கே ஒரு நபர் நிஜ வாழ்க்கையிலேயே அந்தப் பரமபதம் விளையாட்டை விபரீதமாக விளையாடிக் காட்டிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக வைரலாகி வருகிறது. தன்னைச் சுற்றிலும் நிஜமான விஷப் பாம்புகள் அங்கும் இங்குமாக நெளிந்து கொண்டிருக்கும் வேளையில், எதைப் பற்றியும் கவலைப்படாமல் அந்தப் பாம்புகளுக்கு நடுவே அமர்ந்து அவர் அசால்ட்டாகப் பரமபதம் விளையாடிக் கொண்டிருக்கிறார்.

https://twitter.com/SurajMaurya03/status/2095052097893109851/video/1

Advertisement

அந்த நபரைக் கடிக்கப் பாம்புகள் சீறி வந்தாலும், அவர் காட்டும் அசாத்திய தைரியம் மற்றும் தன்னம்பிக்கையைப் பார்க்கும் போது, இது அவருக்கு விளையாட்டு அல்ல, தினமும் செய்யும் சாதாரண வேலை போலத் தோன்றுகிறது. சிறுவயது விளையாட்டைப் பல வருடங்களுக்குப் பிறகு நினைவு கூர்ந்ததோடு மட்டுமல்லாமல், நிஜப் பாம்புகளை வைத்தே அவர் காட்டியுள்ள இந்த ‘லைவ் டெமோ’ நெட்டிசன்களை ஒரே நேரத்தில் சிரிக்கவும், அதே சமயம் பயத்தில் நடுங்கவும் வைத்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in