CRIME
“ஐயோ கொடுமையே.. தாயாகி 5 மாதங்கள்தான்… வேலைக்குத் திரும்பிய முதல் நாளிலேயே நேர்ந்த அசுர விபரீதம்..!” இந்திய வம்சாவளி பெண் துணைத் தலைவருக்கு நேர்ந்த கொடூரம்… குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்த டைம்ஸ் ஸ்கொயர் பகுதியில் அரங்கேறிய கொடூரக் கத்திக்குத்துச் சம்பவத்தில், பேங்க் ஆஃப் அமெரிக்கா நிறுவனத்தின் இந்திய வம்சாவளி இளம் பெண் துணைத் தலைவர் எரின் பியாசென்டி (32) பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குழந்தை பிறந்து 5 மாதங்கள் மகப்பேறு விடுப்பில் இருந்த எரின், மீண்டும் வேலைக்குத் திரும்பிய முதல் நாளிலேயே இந்த எதிர்பாராத விபரீதம் நிகழ்ந்து அவரது இளம் குடும்பத்தின் மகிழ்ச்சியை அடியோடு சிதைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி மாலை, டைம்ஸ் ஸ்கொயர் அருகே 2 பெரிய கத்திகளுடன் சுற்றித் திரிந்த பமீலா சிஸ்னெரோஸ் (49) என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண், முதலில் 68 வயது முதியவர் ஒருவரைக் குத்திவிட்டு, பின்னர் எரினையும் கொடூரமாகக் கத்தியால் குத்தியுள்ளார். படுகாயமடைந்த எரின் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்தார்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற பென்சில்வேனியா பல்கலைக்கழகம் மற்றும் ஃபோர்டாம் சட்டப் பள்ளியில் படித்து இளம் வயதிலேயே பேங்க் ஆஃப் அமெரிக்காவின் துணைத் தலைவராக உயர்ந்த எரின், அண்மையில்தான் தனது இரண்டாவது திருமண ஆண்டைக் கொண்டாடிப் புதிய வீட்டிற்குக் குடிபெயர்ந்திருந்தார். கத்தியுடன் போலீஸாரை நோக்கிப் பாய்ந்த கொலையாளிப் பெண்ணைச் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்ற நியூயார்க் போலீஸார், இக்கொடூரச் சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தனது 5 மாதப் பெண் குழந்தையுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்கிய எரின் பியாசென்டியின் இந்தத் துயர மரணம், சர்வதேச அளவில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் மனநலம் குறித்த மாபெரும் விவாதத்தையும், அவரது நிறுவனம் மற்றும் சக ஊழியர்கள் மத்தியில் இமாலய சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
