LATEST NEWS
“அய்யயோ என்ன ஆச்சு..?” நடுவானில் அலறிய எமர்ஜென்சி அலாரம்… விறுவிறுவென U-turn அடித்த இண்டிகோ விமானம்… வானில் நடந்த திக்திக்’ நிமிடங்கள்..!!
கோவாவில் இருந்து டெல்லி நோக்கிப் புறப்பட்ட இண்டிகோ விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகத் திருப்பி அனுப்பப்பட்டு கோவாவிலேயே தரையிறக்கப்பட்டது. இண்டிகோ நிறுவனத்திற்குச் சொந்தமான 6E 2102 என்ற இந்த விமானம், திட்டமிட்டபடி காலை 9.15 மணிக்கு கோவா மனோகர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் ஒரு இன்ஜினில் பழுது ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
நடுவானில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து விமானத்தில் ‘அவசரநிலை’ அலாரம் ஒலிக்கத் தொடங்கியதால், பயணிகள் அனைவரும் மிகுந்த அதிர்ச்சியும் அச்சமும் அடைந்தனர். நிலைமையைச் சுதாரித்துக் கொண்ட விமானிகள் உடனடியாக விமானத்தை யு-டர்ன் அடித்து மீண்டும் கோவா நோக்கியே திருப்பினர். கோவா விமான நிலையத்தில் ‘முழு அவசரநிலை’ பிரகடனப்படுத்தப்பட்டு, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் விமானம் அங்கு பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இண்டிகோ நிறுவனம், பாதுகாப்பு விதிமுறைகளின்படி விமானம் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டதாகவும், பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்கே தாங்கள் முன்னுரிமை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், பாதிப்புக்குள்ளான பயணிகளுக்கு மாற்று விமான ஏற்பாடுகளும், சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
