LATEST NEWS
“நாங்கள் போராடினோம், நீங்கள் என்ன செய்தீர்கள்..?” அமித் ஷா மீது காங்கிரஸ் தலைவர் கார்கே கடும் தாக்கு.. அனல் பறக்கும் அரசியல் களம்..!!
கோவாவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விமர்சிப்பதோடு, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மீது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் தாக்குதல் தொடுத்துப் பேசியுள்ளார். “நாங்கள் தேசபக்தர்களா இல்லையா?” என்று கேள்வி எழுப்பிய அவர், நாட்டின் சுதந்திரத்திற்காகத் தங்கள் மக்கள் போராடியதாகவும், சுதந்திரப் போராட்டத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் பங்களிப்பு என்னவென்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தான் எம்எல்ஏ-வாக இருந்தபோது அமித் ஷா பிறக்கவே இல்லை என்றும், நாட்டின் சுதந்திரப் போராட்டம் குறித்தும் தேசபக்தி குறித்தும் தங்களுக்கு யாரும் கற்றுக்கொடுக்கத் தேவையில்லை என்றும் அவர் காரசாரமாகத் தெரிவித்துள்ளார். அமித் ஷாவின் வயது மற்றும் அரசியல் பின்புலத்தைக் குறிப்பிட்டு அவர் பேசிய இந்தக் கருத்துகள், தேசிய அளவில் பெரும் விவாதத்தையும் அரசியல் அரங்கில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.
