LATEST NEWS
“தமிழகத்தில் நடப்பது இதுதான்…” அமித்ஷா கையில் ஆளுநர் அர்லேக்கர் கொடுத்த அந்த ரிப்போர்ட்… டெல்லியில் நடந்த ரகசிய ஆலோசனை..!!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் அர்லேக்கர் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பின்போது, தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலைமை குறித்த அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டிருந்த நிலையில், அது தொடர்பான விவரங்களை ஆளுநர் எடுத்துரைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இத்தகைய அரசியல் சூழலுக்கு மத்தியில், உள்துறை அமைச்சருடனான ஆளுநரின் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
