LATEST NEWS
அமித்ஷாவுக்கு அவ்வளவு பயமா..? தொகுதி மறுவரையரை விஷயத்தில் CM விஜய் பல்டி அடித்தது ஏன்..? தயாநிதிமாறன் கடும் விமர்சனம்…!!
தொகுதி மறுவரையறை விவகாரத்தில், ஆரம்பத்தில் தொகுதி மறுவரையறையே வேண்டாம் என்று கூறிவிட்டு, தற்போது “நியாயமான தொகுதி மறுவரையறை” வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திடீரெனப் பல்டி அடித்துள்ளதாக திமுக எம்பி தயாநிதி மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பார்த்ததும், தொகுதி மறுவரையறை குறித்த தனது முந்தைய கடுமையான நிலைப்பாட்டை முதலமைச்சர் விஜய் மாற்றிக் கொண்டாரோ என்ற சந்தேகம் எழுவதாகவும், அமித் ஷாவைக் கண்டு அவருக்கு பயமா என்றும் மாறன் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுகவை பொறுத்தவரையில், மக்கள் தொகையைக் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாட்டின் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றப் பிரதிநிதித்துவ இடங்களின் சதவீதம் எக்காரணம் கொண்டும் குறையக்கூடாது என்பதில் மிக உறுதியாக உள்ளது. “நியாயமான தொகுதி மறுவரையறை” என்பதில் திமுக தொடக்கம் முதலே நிலையான மற்றும் தெளிவான கொள்கையைக் கொண்டிருப்பதாக விளக்கிய தயாநிதி மாறன், தவெக அரசு இன்னும் வராத ஒரு மசோதாவை முன்வைத்து நாடகம் ஆடுவதாகவும், ஒரே வாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு முரணாகச் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்
