“ஐயோ இந்த கொடி இல்ல…!” அமித் ஷா முகத்தில் சட்டென மாறிய கோபம்.. புதுச்சேரி மேடையில் நடந்த பெரும் கூத்து..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஐயோ இந்த கொடி இல்ல…!” அமித் ஷா முகத்தில் சட்டென மாறிய கோபம்.. புதுச்சேரி மேடையில் நடந்த பெரும் கூத்து..!!

Published

on

புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற ‘ஹர் கர் திரங்கா’ பிரச்சார நிகழ்ச்சியின் போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்மாநில அமைச்சர் நமச்சிவாயத்தைக் கோபமாகக் கடிந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைப்பதற்காக அமித் ஷா மேடைக்கு வந்தபோது, அமைச்சர் நமச்சிவாயம் கட்சி சார்ந்த காவி நிறக் கொடியை அவரிடம் நீட்டியுள்ளார். தேசியக் கொடிக்கு பதிலாகக் கட்சி கொடியை நீட்டியதைக் கண்டு கடுப்பான அமித் ஷா, “இது இல்ல… தேசியக் கொடியை எடுத்துட்டு வாங்க!” என்று மேடையிலேயே சட்டெனக் கோபத்துடன் கூறினார்.

https://www.instagram.com/reel/Db0SaaBABqD/?utm_source=ig_web_button_share_sheet

Advertisement

இதையடுத்துத் தவற உணர்ந்த அமைச்சர் நமச்சிவாயம் உடனடியாகத் தேசியக் கொடியைப் பெற்று அமித் ஷாவிடம் வழங்கினார். அதன் பின்னரே அமித் ஷா அந்தத் தேசியக் கொடியை அசைத்து ‘ஹர் கர் திரங்கா’ விழிப்புணர்வு நிகழ்ச்சியை முறைப்படி தொடங்கி வைத்தார். தேசியக் கொடி ஏற்றும் முக்கிய நிகழ்ச்சியில் கட்சி கொடியைக் கொண்டு வந்து கொடுத்து, மத்திய அமைச்சரின் கோபத்திற்கு ஆளான புதுச்சேரி பாஜக அமைச்சரின் இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி இணையவாசிகளிடையே வேகமாகப் பகிரப்பட்டு, அரசியல் வட்டாரத்தில் காரசார விவாதங்களை உருவாக்கியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in