LATEST NEWS
தவெகவுடன் அதிமுக கூட்டணி..? இன்னும் 6 மாசம்தான் டைம் இருக்கு.. இபிஎஸ்ஸுக்கு அதிருப்தி அணி வைத்த மெகா கெடு.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!
தமிழக வெற்றிக் கழகத்துடன் அதிமுக கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தபோதிலும், அதை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று அதிமுக அதிருப்தி அணியினர் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதிமுகவின் மூத்த தலைவர்களான எஸ்பி வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக எடுத்த தவறான முடிவுகளாலும், கூட்டணி வியூகத்தில் கோட்டை விட்டதாலும் மட்டுமே அதிமுக தொடர்ந்து பல்வேறு தேர்தல்களில் தோல்விகளைச் சந்தித்து வருவதாகக் கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும், இன்னும் ஆறு மாதங்களில் தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் வரவிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், கட்சி மேலிடம் உடனடியாக விழித்துக் கொண்டு அதிமுகவைப் பலப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். வலுவான கூட்டணிகளை அமைப்பதிலும், தொண்டர்களை ஒருங்கிணைப்பதிலும் தலைமை காட்டும் அலட்சியப்போக்கு தொடர்ந்தால் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த அறிக்கை வெளியானது அதிமுக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
