காத்து வீசலையா..? ஒரு அமைச்சரா இருந்துட்டு பொய் சொல்லாதீங்க… ஆதவ் அர்ஜுனாவை வெளுத்து வாங்கிய திமுக…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

காத்து வீசலையா..? ஒரு அமைச்சரா இருந்துட்டு பொய் சொல்லாதீங்க… ஆதவ் அர்ஜுனாவை வெளுத்து வாங்கிய திமுக…!!

Published

on

தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினைக்கு போதிய மழையும், காற்றும் இல்லாததே காரணம் என்று தவெக அரசின் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியிருந்த கருத்துக்கு, திமுக செய்தித் தொடர்பாளர் நாக நந்தினி வீடியோ வெளியீடு மூலம் தற்பொழுது மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். அண்மையில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டங்களிலேயே அடுத்தடுத்து மின்வெட்டு ஏற்பட்ட விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், அதற்கு வானிலையைக் காரணம் காட்டி அமைச்சர் பேசியதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் இந்த விளக்கத்தை முழுமையாக மறுத்துள்ள நாக நந்தினி, “அமைச்சரே, நீங்கள் ஒருமுறை தாராபுரத்திற்கு நேரில் வந்து பாருங்கள்; இங்குள்ள காற்றாலைகள் எல்லாம் மிக நன்றாகச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. தாராபுரம் பகுதியில் காற்றும் தங்குதடையின்றி நன்றாகத்தான் வீசிக் கொண்டிருக்கிறது. உண்மை நிலை இவ்வாறிருக்க, தமிழ்நாட்டில் காற்றே வீசவில்லை என்ற ஒரு அப்பட்டமான பொய்யை அமைச்சராக இருக்கும் நீங்களே பொதுமக்களிடம் கூறுகிறீர்கள்” என்று தனது வீடியோ பதிவில் நேரடியாகச் சாடியுள்ளார்.

Advertisement

மேலும், நிலவி வரும் மின் விநியோகத் தோல்விகளையும், நிர்வாகச் சீர்கேடுகளையும் மூடி மறைப்பதற்காக, இயற்கையின் மீது பழியைப் போட்டு மக்களை ஏமாற்ற வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “அமைச்சரின் இந்தத் தவறான வாதத்தை எங்கள் ஊர் மக்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி விமர்சித்து வருகிறார்கள். எனவே, பொறுப்பான ஒரு அமைச்சர் பதவியில் அமர்ந்துகொண்டு பொதுமக்களிடம் தொடர்ந்து இதுபோன்ற பொய்களைப் பேசாதீர்கள்” என நாக நந்தினி தனது கடுமையான கண்டனத்தை முன்வைத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in