LATEST NEWS
“ஐயோ கொடுமையே.. ரயிலில் ஏறிய சில நிமிடங்களில் நேர்ந்த சோகம்… 24 வயதில் துடிதுடித்துப் போன இளம் அதிகாரியின் உயிர்..!!”
சென்னை தாம்பரத்தில், இளம் தீயணைப்பு அதிகாரியான ராகுல்மதி (24) இதய செயலிழப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரமகுடியைச் சேர்ந்த இவர், கடந்த ஜனவரி மாதம் முதல் தீயணைப்பு பயிற்சிப் பள்ளியில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், பணிக்குச் செல்வதற்காக ரயிலில் ஏறியபோது அவருக்கு திடீரென கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டபோதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
