நடிகர் ஜி.பி. முத்துவுக்கு திடீர் சிக்கல்..! திரண்டு சென்று புகார் அளித்த 100 ஊர்மக்கள்.. பின்னணியில் நடந்தது என்ன..? காவல் நிலைய முற்றுகைப் போராட்டத்தால் பரபரப்பு…!! – cinefeeds
Connect with us

CINEMA

நடிகர் ஜி.பி. முத்துவுக்கு திடீர் சிக்கல்..! திரண்டு சென்று புகார் அளித்த 100 ஊர்மக்கள்.. பின்னணியில் நடந்தது என்ன..? காவல் நிலைய முற்றுகைப் போராட்டத்தால் பரபரப்பு…!!

Published

on

யூடியூப் மற்றும் சமூக வலைதளப் பிரபலமான ஜிபி முத்து மீது அவரது ஊரைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, தங்கள் ஊர் மக்கள் சிலர் தனக்கு எதிராக மாந்திரீகம் மற்றும் செய்வினை செய்வதாகக் கூறி ஜிபி முத்து சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ இணையத்தில் தீயாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கோயில் கட்டுவதற்காக நடத்தப்பட்ட புனிதமான பூஜையை, சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்ற ஒரே நோக்கில் மாந்திரீகம் என்று ஜிபி முத்து வதந்தி பரப்பியதாக ஊர்மக்கள் தங்கள் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

ஊர்மக்கள் திரண்டு அளித்த இந்தப் புகாரைத் தொடர்ந்து, ஜிபி முத்து தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் இந்த விவகாரத்தால் தான் பெரும் மன உளைச்சலுக்கும் துயரத்திற்கும் ஆளாகியிருப்பதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள அவர், இந்த சர்ச்சையால் தனது குடும்பமும் தானும் நிம்மதியின்றித் தவித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in