“குறும்படம் எடுக்க 5 லட்சமா..?” பிக்பாஸ் வர்ஷினி கூட்டாளிகளுடன் சேர்ந்து செய்த பகீர் காரியம்.. 26 வயது வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்.. அம்பலமான அதிர்ச்சி பின்னணி..!1 – cinefeeds
Connect with us

CINEMA

“குறும்படம் எடுக்க 5 லட்சமா..?” பிக்பாஸ் வர்ஷினி கூட்டாளிகளுடன் சேர்ந்து செய்த பகீர் காரியம்.. 26 வயது வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்.. அம்பலமான அதிர்ச்சி பின்னணி..!1

Published

on

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய ‘பிக்பாஸ்’ தமிழ் 8-வது சீசன் வைல்டு கார்டு போட்டியாளரும், நடிகையுமான வர்ஷினி வெங்கட் பண மோசடி மற்றும் மிரட்டல் புகாரில் சென்னையில் உள்ள கிண்டி போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’, ‘சொட்ட சொட்ட நனையுது’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள வர்ஷினி, ஆந்திராவைச் சேர்ந்த தனது நண்பரான 26 வயது இளைஞரிடம் ‘குறும்படம் எடுக்கலாம்’ என்று கூறி ரூ.5 லட்சம் வாங்கியதாகத் தெரிகிறது. நீண்ட நாட்களாகியும் படம் எடுக்காததால் சந்தேகமடைந்த அந்த இளைஞர், கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டபோது வர்ஷினி அதைத் தராமல் இழுத்தடித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, அந்த இளைஞரைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்த வர்ஷினி மற்றும் அவருடன் இருந்த சில நபர்கள் இணைந்து அந்த இளைஞரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். மேலும், அவரிடமிருந்த இரண்டு மதிப்புமிக்க செல்போன்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணத்தைப் பறித்துக் கொண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட இளைஞர் அளித்த புகாரின் பேரில் கிண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து வர்ஷினி வெங்கட்டைக் கைது செய்துள்ளதோடு, தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிக்பாஸ் பிரபலம் ஒருவரே பண மோசடி வழக்கில் கைதாகியுள்ள இச்சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in