LATEST NEWS
“பாவம்னு நினைச்சு தண்ணியில தூக்கி போட்டீங்க… அவ்வளவுதான்..!” ஆமைக்குஞ்சுகள் மணலில் ஊர்ந்து செல்வது ஏன்..? வீடியோவுக்கு பின்னாடி இவ்வளவு பெரிய மேஜிக் இருக்கா..!!
கடலாமைக்குஞ்சுகளைக் கரையில் கடலுக்குத் தொலைவில் விட்டு ஊர்ந்து செல்ல வைப்பது பலருக்குப் பார்ப்பதற்கு இரக்கமற்ற செயலாகத் தோன்றலாம். ஆனால், அவை மணலில் கஷ்டப்பட்டு ஊர்ந்து கடலைச் சென்றடைவது அவற்றின் வாழ்நாளின் மிக முக்கியமான மூன்று அறிவியல் காரணங்களுக்காக மிகவும் அவசியமானது. முதன்முறையாக மணலைத் தொட்டு ஊர்ந்து செல்லும்போது, அந்த குறிப்பிட்ட கடற்கரையின் காந்தப்புலத்தை ஆமைகள் தங்களது நினைவில் பதிவு செய்து கொள்கின்றன. இந்த “இயற்கை ஜிபிஎஸ்” ஆற்றலே, சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவை வளர்ந்து மீண்டும் அதே கடற்கரைக்கு வந்து முட்டையிடுவதற்கு வழிவகுக்கிறது.
La gente se enfada mucho con la suelta de tortugas tan lejos de la orilla,
Pero para el que no lo sabe,
Esto tiene un proceso,
Aunque parezca cruel hacerlas caminar por la arena arrastrando su peso,
esa caminata es vital para su supervivencia por tres razones científicas
La… pic.twitter.com/8rqaSDRxqm— ༺ᥫᩣLꂦꌃꍏᥫᩣ༻ (@Dama_DeLobos) August 8, 2026
மேலும், கரையில் அவை உடலை இழுத்துக்கொண்டு நகரும் கடினமான உடற்பயிற்சி, அவற்றின் இரத்த ஓட்டத்தைத் தூண்டி, நுரையீரலை விரிவடையச் செய்து, துடுப்புகளைக் கடலில் நீந்துவதற்கு ஏற்ப தயார்படுத்துகிறது. அதேபோல, அடிவானத்தின் வெளிச்சம் மற்றும் புவிஈர்ப்பு விசையை வைத்துச் சரியான திசையைக் கண்டறிந்து நீரைக் சென்றடையவும் இந்த ஊர்ந்து செல்லும் பயிற்சிதான் கற்றுத் தருகிறது. எனவே, கடலாமைகளுக்கு அளவுக்கு அதிகமாக உதவி செய்து, அவற்றை நேரடியாக நீரில் விடுவது அவை உயிர்வாழ்வதற்கான இயற்கைத் திறன்களையே பறித்துவிடும் என்பதால், இந்த இயற்கை நிகழ்வைக் கண்டு யாரும் வருத்தப்படத் தேவையில்லை.
