“கார்த்திக்கு எந்த நம்பிக்கையில பெண் கொடுத்தாங்கனே தெரியல”.. நானா இருந்தா கொடுத்திருக்க மாட்டேன்.. மேடையில் உடைத்துப் பேசிய தந்தை சிவகுமார்..!! – cinefeeds
Connect with us

CINEMA

“கார்த்திக்கு எந்த நம்பிக்கையில பெண் கொடுத்தாங்கனே தெரியல”.. நானா இருந்தா கொடுத்திருக்க மாட்டேன்.. மேடையில் உடைத்துப் பேசிய தந்தை சிவகுமார்..!!

Published

on

பருத்தி வீரன் படத்தை பார்த்த பிறகு வேறு ஒருவராக இருந்திருந்தால், நிச்சயம் தனது மகன் கார்த்திக்கு பெண் கொடுத்திருக்கமாட்டார்கள் என மூத்த நடிகர் சிவகுமார் சுவாரசியமாகப் பேசியுள்ளார். கோவையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர், தன் வாழ்க்கைப் பயணம், கல்வி மற்றும் ஒழுக்கத்தின் முக்கியத்துவம் குறித்துப் பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

அடிப்படை வசதிகள் இல்லாத கிராமத்தில் தனது பள்ளிப் படிப்பைத் தொடங்கி, 1957ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு முடித்த தமோடு படித்த 11 பேரில், தான் மட்டுமே படிப்பை நிறைவு செய்ததாகக் சிவகுமார் குறிப்பிட்டார். பின்னர் சென்னைக்கு வந்து 7 ஆண்டுகள் ஓவியம் படித்துவிட்டு, அந்தத் துறையில் எதிர்காலம் இல்லை என்பதால் சினிமாவுக்குள் நுழைந்ததாகக் கூறினார். சினிமா நிரந்தரமான தொழில் இல்லை என்பதால் திருமணத்தைத் தள்ளிப்போட்டு, 38 படங்களில் நடித்த பிறகே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாகவும், அப்போது சினிமாக்காரர்களுக்குப் பெண் கொடுக்கப் பலரும் தயங்கியதாகவும் பழைய நினைவுகளைப் பகிர்ந்தார்.

Advertisement

தொடர்ந்து தனது மகன் கார்த்தி குறித்துப் பேசுகையில், “பருத்தி வீரன் படத்தில் கார்த்தி அப்படியொரு ராட்சத தோற்றத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தை மட்டும் பார்த்துவிட்டு வேறு யாராக இருந்தாலும் பெண் கொடுத்திருக்கமாட்டார்கள், ஏன் நானே இருந்திருந்தாலும் கூட கார்த்திக்கு பெண் கொடுத்திருக்கமாட்டேன். எந்த நம்பிக்கையில் அவர்கள் கார்த்திக்கு பெண் கொடுத்தார்கள் என்றே தெரியவில்லை” என்று நகைச்சுவையோடும் வியப்போடும் சிவகுமார் அந்த மேடையில் பேசினார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in