CINEMA
லட்டை வைத்து காமெடி பண்ணாதீங்க…. கண்டித்த பவன் கல்யாண்…. மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி..!!

லட்டு விவகாரத்தில் மன்னிப்பு கோருவதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது X பதிவில், பவன் கல்யாண் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், எதிர்பாராத தவறான புரிதலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், பெருமாளுடைய தாழ்மையான பக்தன் என்ற முறையில் மரபுடன் நடப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
அதாவது ‘மெய்யழகன்’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கார்த்தியிடம், அவரது படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சியை காட்டி தொகுப்பாளினி கேள்வி கேட்டதற்கு, லட்டு ஒரு சென்சிடிவ் மேட்டர் என்று கார்த்தி கூறியிருந்தார். இந்நிலையில், லட்டை வைத்து காமெடி செய்யாதீர் என்று பவன் கல்யாண் கண்டித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.