CINEMA
படத்தில் “கேப்டன்” பாடலை வைத்த காரணம் இதுதான்…. உண்மையை வெளிப்படையாக சொன்ன இயக்குனர் தமிழரசன்…!!
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இணைந்து நடித்த வெளிவந்த திரைப்படம் லப்பர் பந்து. இந்த படத்தில் சஞ்சனா, பால சரவணன், சுவாசிக்க உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். மக்கள் மத்தியில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
விமர்சன ரீதியாக பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது . படம் வெளியாகி முதல் நாளில் உலக அளவில் 70 லட்சம் வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் படக்குழு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,விஜயகாந்த் சாரோட ரசிகன் நான். அதனால்தான் பொட்டு வெச்ச தங்க குடம் பாடலை லப்பர் பந்து படத்தில் வைத்தேன் என்று கூறியுள்ளார்.