CINEMA
கெத்து கேரக்டரில் தினேஷிற்கு முன் நடிக்க இருந்த பிரபல நடிகர்…. மிஸ் பண்ணிட்டாரே… யார் தெரியுமா…?
இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இணைந்து நடித்த வெளிவந்த திரைப்படம் லப்பர் பந்து. இந்த படத்தில் சஞ்சனா, பால சரவணன், சுவாசிக்க உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். மக்கள் மத்தியில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதில் கெத்து கேரக்டரில் நடித்த தினேஷின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இந்த கேரக்டரில் நடிக்க தினேஷிற்கு முன் எஸ் ஜே சூர்யாவிடம் பேசப்பட்டுள்ளது. ஆனால் அவர் 5 கோடி பட்ஜெட் சம்பளத்திற்கு 7 கோடி சம்பளம் கேட்டதால் நடிக்கவில்லையாம்.