CINEMA
அப்படிப்போடு…! “நீ பொட்டு வச்ச தங்கக்குடம்” பாடல் வெளியிட்ட லப்பர் பந்து படக்குழு…!!

இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இணைந்து நடித்த வெளிவந்த திரைப்படம் லப்பர் பந்து. இந்த படத்தில் சஞ்சனா, பால சரவணன், சுவாசிக்க உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். மக்கள் மத்தியில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
விமர்சன ரீதியாக பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது . படம் மூன்றாவது வாரம் கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் தினேஷ் வரும்பொழுது விஜயகாந்தின் பொட்டு வச்ச தங்க குடம் என்ற பாடல் ஒளிபரப்பாகும். இந்த நிலையில் தற்போது படத்தில்தினேஷின் இந்த இண்ட்ரோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.