சி.எம் விஜய்யின் காரில் இருந்த ‘அந்த’ கிளாஸ்…சொந்தமாக கார் ஓட்டிய முதலமைச்சர் விஜய்… ஸ்டோரேஜில் இருந்த ரகசிய பொருள்…இந்தியாவிலேயே எந்த முதலமைச்சரும் செய்யாத மாற்றம்…ஆனால் எதிர்க்கட்சிகள் கிளப்பும் புதிய சர்ச்சை…! – cinefeeds
Connect with us

CINEMA

சி.எம் விஜய்யின் காரில் இருந்த ‘அந்த’ கிளாஸ்…சொந்தமாக கார் ஓட்டிய முதலமைச்சர் விஜய்… ஸ்டோரேஜில் இருந்த ரகசிய பொருள்…இந்தியாவிலேயே எந்த முதலமைச்சரும் செய்யாத மாற்றம்…ஆனால் எதிர்க்கட்சிகள் கிளப்பும் புதிய சர்ச்சை…!

Published

on

தமிழக அரசியலில் பல்லாண்டுகளாக நீடித்து வந்த திமுக, அதிமுக ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார் நடிகர் விஜய். ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற புதிய அரசியல் இலக்கணத்தோடு கூட்டணி கட்சிகளையும் அமைச்சரவையில் அரவணைத்துச் செயல்படும் சி.எம் விஜய்யின் நடவடிக்கைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் டெல்லியில் நடந்த நிதி ஆயோக் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய், அதன்பின் சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று அதிரடி வழிபாடு நடத்தியுள்ளார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற முன்னாள் முதலமைச்சர்கள் பின்பற்றிய அதே நம்பிக்கையோடு அங்கே சென்ற விஜய்க்குப் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டதோடு, அவர் கோயிலுக்கு 1 கிலோ 600 கிராம் எடையுள்ள 2.5 அடி நீள வெள்ளி வாள் ஒன்றைக் காணிக்கையாகவும் வழங்கியுள்ளார்.

இந்த ஆன்மீகப் பயணத்தின் போது, வழக்கமான பாதுகாப்பு நெறிமுறைகளைத் தாண்டி, கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குச் செல்லும் போதும் அங்கிருந்து திரும்பும் போதும் முதலமைச்சர் விஜய்யே தனது காரைச் சுயமே ஓட்டிச் சென்றுள்ளார். இந்தியாவில் எந்தவொரு முதலமைச்சரும் செய்யாத இந்த ‘கேஷுவல்’ காரோட்டும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி, “எங்கள் அண்ணன் அனைத்திலும் மாற்றத்தைக் கொண்டு வருகிறார்” என அவரது தொண்டர்களால் ‘ஃபயர்’ விடப்பட்டு செம வைரலாகப் பரவி வந்தது. ஆனால், இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் ஒரு புதிய அரசியல் பஞ்சாயத்தையும், காரசாரமான விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

Advertisement

காரின் உள்பகுதியில் உள்ள ஸ்டோரேஜ் கம்ப்பார்ட்மென்ட்டில் பாதியளவு திரவத்துடன் ஒரு கண்ணாடி கிளாஸ் (Glass) இருக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் வெளியாகின. இதை உற்றுநோக்கிய எதிர்ரப்பினர், “அதில் இருப்பது மதுபானம் தான், ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டலாமா?” என்று சமூக வலைத்தளங்களில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசத் தொடங்கினர். இதற்கு உடனடியாகப் பதிலடி கொடுத்து வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் விர்ச்சுவல் வாரியர்ஸ் (Virtual Warriors), “எல்லாவற்றையும் குற்றக் கண்ணோட்டத்தோடு பார்ப்பதா? அந்த கிளாஸில் இருப்பது ஜூஸாகவோ அல்லது வேறு ஆரோக்கிய பானமாகவோ இருக்கலாம்; அல்லது அது திட்டமிட்டுச் செய்யப்பட்ட பக்கா எடிட்டிங் வேலை” என்று பதிவிட்டு, தங்களது முதலமைச்சருக்கு ஆதரவாக இணையத்தில் பெரும் போரே நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in