தனுஷ், திரிஷா மீது அதிரடி குற்றச்சாட்டுகள்…இரண்டாவது திருமணம், விவாகரத்து வததிறமையான பாடகிக்குக் கிடைத்த மறுவாழ்வு… சுசித்ராவுக்காக விஜய் ஆண்டனி செய்த நெகிழ்ச்சியான காரியம்…! – cinefeeds
Connect with us

CINEMA

தனுஷ், திரிஷா மீது அதிரடி குற்றச்சாட்டுகள்…இரண்டாவது திருமணம், விவாகரத்து வததிறமையான பாடகிக்குக் கிடைத்த மறுவாழ்வு… சுசித்ராவுக்காக விஜய் ஆண்டனி செய்த நெகிழ்ச்சியான காரியம்…!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணிப் பின்னணி பாடகிகளில் ஒருவரான சுசித்ரா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மேடையேறிப் பாடியுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆர்.ஜே, பத்திரிகையாளர், பாடகி மற்றும் ‘ஆய்த எழுத்து’ திரைப்பட நடிகை எனப் பன்முகத் திறமைகளுடன் வலம் வந்த சுசித்ராவின் கரியர் உச்சத்தில் இருந்தபோதுதான், ஒட்டுமொத்த கோலிவுட்டையும் உலுக்கிய ‘சுச்சி லீக்ஸ்’ விவகாரம் வெடித்தது. பிரபலங்களின் அந்தரங்கப் புகைப்படங்கள் ட்விட்டரில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பின்னாட்களில் அதைச் செய்தது தான் இல்லை என்றும், தனுஷ் தான் என்றும் சுசித்ரா கூறியிருந்தார். இந்தச் சூழலில், இடையில் சில காலம் அமைதியாக இருந்த சுசித்ரா, சமீபகாலமாக யூடியூப் நேர்காணல்களில் தனுஷ், திரிஷா, விஜய் மற்றும் உதயநிதி உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் குறித்துப் பல்வேறு அதிரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துத் தொடர் சர்ச்சைகளில் சிக்கி வந்தார்.

கடந்த காலங்களில் சுசித்ராவின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல புயல்கள் வீசின. ‘சுச்சி லீக்ஸ்’ பிரச்சனையின் போது, அவரது அப்போதைய கணவரான கார்த்திக் குமார், சுசித்ராவின் மனநிலை சரியாக இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். பின்னர் கார்த்திக்கை விவாகரத்து செய்த சுசித்ரா, வேறொருவரை மறுமணம் செய்து கொண்டு செட்டிலானார். சமீபத்திய பேட்டிகளில் விஜய் – சங்கீதா விவாகரத்து விவகாரம் மற்றும் திரிஷாவின் காதல் விவகாரங்கள் குறித்து அவர் பேசியவை இணையத்தில் காட்டுத்தீயாய் பரவின. இத்தகைய தொடர் சர்ச்சைகளுக்கு மத்தியிலும், “சுசித்ரா வெறும் சர்ச்சையாளர் மட்டுமல்ல, அவர் ஒரு மிகச்சிறந்த பாடகி; அவர் மீண்டும் பாட வர வேண்டும்” என்பதுதான் இசை ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.

Advertisement

ரசிகர்களின் அந்தக் கோரிக்கையை இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி இப்போது சாத்தியமாக்கியுள்ளார். நேற்று நடைபெற்ற விஜய் ஆண்டனியின் பிரம்மாண்ட இசைக்கச்சேரியில், பாடகி சுசித்ரா சிறப்புப் பாடகியாக மேடையேறினார். விஜய் ஆண்டனி இசையமைப்பில் ‘வேலாயுதம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற தனது சூப்பர்ஹிட் பாடலான ‘மாயம் செய்தாயோ’ என்ற பாடலை அவர் மேடையில் பாடி ரசிகர்களைக் கட்டிப்போட்டார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு சுசித்ராவை மீண்டும் மேடையில், பழைய உற்சாகத்தோடு கண்ட ரசிகர்கள், “இனிமேல் சுசித்ரா தொடர்ந்து பாட வேண்டும்; திறமையான ஒரு பாடகிக்கு மீண்டும் இந்த மேடையை அமைத்துக் கொடுத்த விஜய் ஆண்டனிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்” என சமூக வலைத்தளங்களில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in