CINEMA
“ஏன் உன்னை லவ் பண்ணக்கூடாது..?” த்ரிஷாவின் அழகைக் கண்டு மயங்கிய குஷ்பு… இணையத்தில் தீயாய் பரவும் வைரல் கமெண்ட்..!!
மஞ்சள் நிற சேலையில் பேரழகாக ஜொலிக்கும் தனது புதிய புகைப்படங்களை நடிகை த்ரிஷா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களது லைக்குகளையும் வாழ்த்துகளையும் மழையாகப் பொழிந்து வருகின்றனர்.
இப்புகைப்படத்தைப் பார்த்த பிரபல நடிகை குஷ்பு, “நான் உன்னை லவ் பண்ணாமல் இருக்க ஏதேனும் ஒரு காரணத்தை கூற முடியுமா?” என்று கமெண்ட் செய்து த்ரிஷாவின் அழகை வர்ணித்துள்ளார். மேலும் அவரை பேரழகி என்று கொஞ்சியுள்ள இந்தக் கமெண்ட் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், இவர்களுக்கு இடையேயான ஆழமான நட்பையும் வெளிக்காட்டியுள்ளது.
