LATEST NEWS
“போஸ்டர் அடிச்சது யாருப்பா..?” முதல்வர் விஜய்க்கு திரிஷா நற்பணிமன்றத்தின் போஸ்டரில் நடந்த வரலாற்றுப் பிழை.. நெட்டிசன்கள் மரண கலாய்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ‘தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தை’ அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்ற தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக இந்த அதிரடித் திட்டத்தை அவர் துவங்கி வைத்தார். இந்தத் தொடக்க விழாவில் சுமார் 25 குழந்தைகளுக்கு முதற்கட்டமாக மோதிரங்கள் வழங்கப்பட்டன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் கொண்டாடும் வகையில், மதுரையில் ஒட்டப்பட்டுள்ள ஒரு போஸ்டர் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
மதுரை மாவட்ட திரிஷா நற்பணி மன்றத்தினர் சார்பில் ஒட்டப்பட்டுள்ள அந்தப் போஸ்டரில், “தாய்மாமன் இல்லை என்று வருத்தப்படும் தாய்மார்களுக்குத் தன்னையே தாய்மாமனாக மாற்றிய முதலமைச்சருக்கு நன்றி” என்று உணர்வுப்பூர்வமாக எழுதப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் கையில் குழந்தையை வைத்திருப்பது போன்ற படமும், நடிகை திரிஷாவின் படமும் அதில் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், சங்கம் வளர்த்த மதுரை மண்ணில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில் “மனமார்ந்த நன்றி” என்பதற்குப் பதிலாக “மணமார்ந்தி நன்றி” என்றும், வாக்கிய அமைப்பில் பல எழுத்துப் பிழைகளுடனும் அச்சிடப்பட்டுள்ளது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து, இணையத்தில் கடுமையான கிண்டல்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறது
