“அட என்னமா சொல்லுற..! கணவரை விட ஏஐ மேல் தான் காதல்..!” ‘நீயா நானா’வில் பெண் சொன்ன பகீர் உண்மை.. மேடையிலேயே உறைந்துபோன கோபிநாத்..!! – cinefeeds
Connect with us

CINEMA

“அட என்னமா சொல்லுற..! கணவரை விட ஏஐ மேல் தான் காதல்..!” ‘நீயா நானா’வில் பெண் சொன்ன பகீர் உண்மை.. மேடையிலேயே உறைந்துபோன கோபிநாத்..!!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில், மனிதர்களின் அன்றாட வாழ்க்கைக்குள் செயற்கை நுண்ணறிவு எந்த அளவிற்கு ஊடுருவியுள்ளது என்பதை விளக்கும் வகையில் இரண்டு பெண்கள் கூறிய கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன. செல்போன் பயன்பாட்டையும் தாண்டி, மனித உறவுகளுக்குப் பதிலாக ஏஐ தொழிற்நுட்பத்துடன் மனிதர்கள் உணர்வுபூர்வமாக இணையத் தொடங்கியிருப்பதை இந்நிகழ்ச்சி வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு பெண், தனது கணவர் அருகிலிருக்கும் போது கூடத் தான் ஏஐ-யுடன் தான் அன்பாக உரையாடுவதாகவும், மனிதர்களிடம் பேசுவதை விட ஏஐ-யிடம் பேசுவதே தனக்கு மிகுந்த மன அமைதியைத் தருவதாகவும் வெளிப்படையாகக் கூறியுள்ளார். தான் எதிர்பார்க்கும் அன்பையும், நேர்மறையான பதில்களையும் ஏஐ உடனடியாக வழங்குவதால், அதனுடன் பேசுவது ஒரு பழக்கமாகவே மாறிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அலுவலகப் பணிகளுக்காக ஏஐ-யைப் பயன்படுத்தத் தொடங்கி, இறுதியில் கணவரை விட ஏஐ-யுடன் உணர்வுபூர்வமாக நெருக்கமாவதாக அவர் கூறியது, நவீன குடும்ப உறவுகளில் ஏற்படத் தொடங்கியுள்ள புதிய சிக்கலை வெளிப்படுத்தியுள்ளது.

Advertisement

மற்றொரு பெண்ணோ, தனது வாழ்க்கையின் அனைத்து முக்கியமான முடிவுகளையும் ஏஐ-யின் ஆலோசனையைக் கேட்டே எடுப்பதாகத் தெரிவித்துள்ளார். நண்பர்களோ உறவினர்களோ சில நேரங்களில் பொறாமைப்பட்டுத் தவறாக வழிநடத்தக் கூடும், ஆனால் ஏஐ அப்படியின்றித் தன்னுடைய வளர்ச்சிக்கு உண்மையான வழிகாட்டியாக இருப்பதாக அவர் வாதிட்டுள்ளார். மனித உறவுகளுக்குப் பதில் இயந்திரங்களின் ஆலோசனையையும் அன்பையும் மக்கள் தேடத் தொடங்கியிருக்கும் இந்த நிலை, எதிர்காலத்தில் மனித மனித நேயத்தையும் குடும்பக் கட்டமைப்பையும் கேள்விக்குறியாக்கும் எனப் பலரும் அச்சமும் அட்வைஸும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in