யாரும் எதிர்பார்க்காத அதிசயம்.. மனித DNA-வை மாற்றியமைத்த AI.. விஞ்ஞானிகள் பல ஆண்டுகள் தேடிய ரகசியம் வெறும் 21 மணி நேரத்தில் அம்பலம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

யாரும் எதிர்பார்க்காத அதிசயம்.. மனித DNA-வை மாற்றியமைத்த AI.. விஞ்ஞானிகள் பல ஆண்டுகள் தேடிய ரகசியம் வெறும் 21 மணி நேரத்தில் அம்பலம்..!!

Published

on

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மருத்துவ உலகிற்கு ஒரு புதிய நம்பிக்கையை ஆந்த்ரோபிக் நிறுவனம் கொடுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் Claude AI, பாக்டீரியாக்களைத் தாக்கும் வைரஸ்களின் DNA தரவுகளை ஆய்வு செய்து, ‘ART’ என்ற புதிய என்சைம் அமைப்பைக் கண்டறிந்துள்ளது. சுமார் 950 Claude முகவர்கள் இணைந்து, மனித விஞ்ஞானிகள் பல வாரங்கள் அல்லது மாதங்கள் செய்ய வேண்டிய மரபணு ஆய்வுப் பணியை வெறும் 21 மணி நேரத்தில் முடித்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். கணினியில் Text-ஐ Cut-Copy-Paste செய்வது போல, புகழ்பெற்ற ‘CRISPR’ மரபணு எடிட்டிங் தொழில்நுட்பத்தின் கட்டமைப்பை ஒத்ததாக இந்த புதிய ‘ART’ அமைப்பு காணப்படுகிறது.

இருப்பினும், இந்த புதிய அமைப்பு மனித மரபணு குறைபாடுகளைச் சரிசெய்யப் பயன்படும் என்பது தற்போதைக்கு ஒரு கோட்பாடு மட்டுமே ஆகும். இந்த ‘ART’ அமைப்பு துல்லியமாக என்ன வேலை செய்கிறது அல்லது இதனால் மரபணுக்களை மாற்றியமைக்க முடியுமா என்பது இன்னும் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. CRISPR தொழில்நுட்பத்தின் முன்னோடியான விஞ்ஞானி ஃபெங் ஜாங் உட்பட பல ஆய்வாளர்கள், இது ஒரு சுவாரசியமான கண்டுபிடிப்பு என்றும், இதன் மருத்துவப் பயன்பாட்டை உறுதிப்படுத்த இன்னும் பல ஆண்டுகள் ஆய்வகச் சோதனைகளும் (Lab tests) மருத்துவக் கட்ட சோதனைகளும் (Clinical trials) தேவைப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் இந்த ஆராய்ச்சி, எதிர்காலத்தில் பரம்பரை மற்றும் கொடிய நோய்களைக் குணப்படுத்தும் புதிய சிகிச்சைகளைக் கண்டறிய AI எவ்வாறு உதவும் என்பதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in