“நான் மட்டும் த்ரிஷா இடத்தில் இருந்திருந்தால்…” விஜய்யின் லண்டன் பயணச் சர்ச்சை குறித்து ஓப்பனாக உடைத்த நடிகை அம்பிகா.. சூடுபிடிக்கும் கோலிவுட்..!! – cinefeeds
Connect with us

CINEMA

“நான் மட்டும் த்ரிஷா இடத்தில் இருந்திருந்தால்…” விஜய்யின் லண்டன் பயணச் சர்ச்சை குறித்து ஓப்பனாக உடைத்த நடிகை அம்பிகா.. சூடுபிடிக்கும் கோலிவுட்..!!

Published

on

தவெக தலைவர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோரின் லண்டன் பயணச் சர்ச்சை குறித்து, மூத்த நடிகை அம்பிகா சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் தனது கருத்துக்களைத் ஓப்பனாகப் பகிர்ந்துள்ளார். த்ரிஷாவை தனக்கு ‘ஜோடி’ படத்தில் இருந்தே நன்றாகத் தெரியும் என்றும், அவர் ஒரு நல்ல பெண் என்றும் குறிப்பிட்ட அம்பிகா, தேவையில்லாமல் அடுத்தவர்களைப் பற்றி ‘ஜட்ஜ்’ செய்வது நம் வேலை கிடையாது என விமர்சகர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். மேலும், த்ரிஷா அரசியலுக்கு வந்தால் என்ன தவறு எனக் கேள்வி எழுப்பிய அவர், அரசியலில் இளைஞர்களுக்கு சீனியர்கள் வழிவிட வேண்டும் என்றும் கூறினார்.

அதே சமயம், இந்த லண்டன் பயணம் குறித்து மற்றொரு நேர்காணலில் பேசிய அம்பிகா, “எனக்கு ஒரு நல்ல நண்பர் இருந்து, அவர் ஒரு முக்கிய பொறுப்பில் இருக்கும்போது, அவருடன் நான் சென்றால் எதிர்மறையான கருத்துக்கள் வரும் என்று தெரிந்தால், அந்த நட்பை மதித்து நான் அவருடன் செல்வதைத் தவிர்ப்பேன்” என்று தெரிவித்துள்ளார். த்ரிஷாவின் இடத்தில் தான் இருந்திருந்தால் அந்தப் பயணத்தை நிச்சயம் தவிர்த்திருப்பேன் என்றும் அவர் ஓப்பனாகக் குறிப்பிட்டார்.

Advertisement

தொடர்ந்து ஒரு விஷயத்தைப் பற்றி எதிர்மறையான கருத்துக்கள் வந்து கொண்டே இருக்கும்போது, அந்த நட்புக்கு மரியாதை கொடுத்து நாமும் ஜாக்கிரதையாக நடந்து கொண்டு அதைத் தவிர்ப்பதே நல்லது என்றும் அம்பிகா அறிவுறுத்தியுள்ளார். மேலும், சினிமாவில் இருந்து வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இது போன்ற விஷயங்களை விமர்சிப்பது முறையல்ல என்றும் அம்பிகா அந்த நேர்காணலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in