“மதுரை பயலுகடா.. கொடூரமடா…” பஸ் ரூட் போர்டில் இவ்வளவு பெரிய ட்விஸ்ட்டா..? இணையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்திய வீடியோ..!! – cinefeeds
Connect with us

DISTRICT NEWS

“மதுரை பயலுகடா.. கொடூரமடா…” பஸ் ரூட் போர்டில் இவ்வளவு பெரிய ட்விஸ்ட்டா..? இணையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்திய வீடியோ..!!

Published

on

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்தின் எல்.இ.டி. பெயர் பலகையில், ஊரின் பெயருக்குப் பதிலாக “மதுரை பயலுகடா.. கொடூரமாடா…” என்ற வாசகம் ஆங்கிலத்தில் இடம்பெற்றதால், எந்த ஊருக்குப் பேருந்து செல்கிறது என்று தெரியாமல் பயணிகள் கடும் குழப்பத்துடன் அவதிப்பட்டனர். இந்த விசித்திரமான வாசகம் இடம்பெற்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“எது மதுரை பயலுகடா.. கொடூரமடா-வா”… மதுரையில் ஓடும் அரசு பேருந்து LED பெயர் பலகையில் தெரிந்த வாசகம் – வைரலாகும் வீடியோ#Madurai | #Bus | #NameBoard | #ViralVideo | #PolimerNews pic.twitter.com/T4OP2OPaZQ— Polimer News (@polimernews) August 12, 2026

சமீபகாலமாக அரசுப் பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள எல்.இ.டி. திரைகளை மர்ம நபர்கள் ஹேக் செய்து உண்மையான ஊர் பெயர்களுக்குப் பதிலாக இதுபோன்ற மாற்று வார்த்தைகளைப் பதிவிடுவதைத் தொடர்ந்து செய்து வருவது வாடிக்கையாகிவிட்டதால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு உடனடியாக உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடையே வலுத்து வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in