LATEST NEWS
ஆதாரங்கள் சிக்கிருச்சு.. திமுக இனி தப்பிக்க முடியாது..! சொத்துக்களைக் காக்க பாஜகவுடன் டீலிங்.? டாஸ்மாக் ஊழல் வழக்குகளைச் சுட்டிக்காட்டி சி.டி.ஆர்.நிர்மல் குமார் அதிரடி…!!
திமுக தற்போது பாஜகவுடன் நேரடி கூட்டணியில் இயங்கி வருவதாகவும், டெல்லியில் முற்றிலுமாக சரணடைந்து கொத்தடிமையாகச் செயல்பட்டு வருவதாகவும் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மக்களவை மற்றும் மாநிலங்களவை தொகுதி மறுவரையறைக்கு எதிராக திமுக ஒரு வார்த்தை கூடப் பேசாமல் மௌனம் சாதிப்பதாகக் குறிப்பிட்ட அவர், தங்களது குடும்பச் சொத்துக்களையும், கட்சியின் சொத்துக்களையும் மத்திய அரசின் நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ளவே திமுக இவ்வாறு பயந்து நடுங்குவதாகச் சாடியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தில் நடைபெற்றுள்ள பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் உள்ளிட்ட விவகாரங்களில் தகுந்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே, இந்த வழக்குகளில் இருந்து திமுகவினர் எந்தக் காரணத்தைக் கொண்டும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் அவர் உறுதியாகக் கூறியுள்ளார். திமுகவின் இந்த இரட்டை வேட நிலைப்பாட்டை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும் தனது பேட்டியில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
