“என் டாக்டர் கனவே போச்சு” நான் சாகப்போறேன்.. மரண விளிம்பில் நின்ற மாணவி… அடுத்து நடந்த டுவிஸ்ட்… பதறவைக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் டாக்டர் கனவே போச்சு” நான் சாகப்போறேன்.. மரண விளிம்பில் நின்ற மாணவி… அடுத்து நடந்த டுவிஸ்ட்… பதறவைக்கும் வீடியோ..!!

Published

on

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிபெரியார் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், எம்.பி.பி.எஸ் படிக்கும் கனவு நிறைவேறாத விரக்தியில் பருந்தும்பாறை சுற்றுலாத் தலத்தின் மிக உயர்ந்த பகுதியான தாகூர் ஹெட்டிலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்ற நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் செப்டம்பர் 28 அன்று நடந்துள்ளது. பிளஸ் டூ வகுப்பில் வணிகவியல் பிரிவை எடுத்ததால், அவரால் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வை எழுத முடியாது என்ற தவறான புரிதலால் அவர் இந்த தீவிர முடிவை எடுத்துள்ளார். அன்று காலை 11 மணியளவில் தாகூர் ஹெட் பகுதிக்குச் சென்ற அந்தப் பெண், கீழே உள்ள பள்ளத்தாக்கில் குதிக்கப் போவதாக அச்சுறுத்தியுள்ளார்.

அந்தச் சுற்றுலாத் தலத்தில் இருந்த புகைப்படக் கலைஞர் ஒருவர், இளம்பெண் ஆபத்தான நிலையில் இருப்பதை கவனித்து உடனடியாக உள்ளூர் மக்களுக்கும் பீர்மேடு போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர், முதலில் அந்தப் பெண்ணை போன் மூலம் தொடர்புகொண்டு பேசினர். அப்போது போலீஸ் அதிகாரி ஒருவர் அந்தப் பெண்ணிடம் மிகவும் நிதானமாகவும் கனிவாகவும் பேசி, “எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், எதற்கும் பயப்பட வேண்டாம்” என்று தைரியம் கூறி கன்சலிங் செய்துள்ளார்.

Advertisement

அதிகாரியின் தொடர் பேச்சால் சமாதானமடைந்த அந்தப் பெண், மெதுவாக அந்த ஆபத்தான பகுதியிலிருந்து பின்வாங்கினார். பின்னர் தீயணைப்புத் துறையினரின் உதவியோடு அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு கீழே அழைத்து வரப்பட்டார். போலீஸ் அதிகாரி அந்தப் பெண்ணை ஆற்றுப்படுத்தும் இந்த உருக்கமான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, போலீசாரின் மனிதநேயமிக்க செயலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மீட்புக்குப் பிறகு அந்தப் பெண்ணிற்குத் தேவையான தொழில்முறை ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in