BREAKING: அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடு.. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடு.. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு..!!

Published

on

கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடு மற்றும் லஞ்சப் புகார் குறித்து விரிவான விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு (DVAC) சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நியமனத்திற்காகத் தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகி ஒருவர் ரூ.15 லட்சம் லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பின்னணியில், ஜெகன்ராஜ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையின் போது, தகுதியற்றவர்களை நியமிப்பதற்காக லஞ்சப் பணம் கைமாறியுள்ளது என்ற குற்றச்சாட்டை நீதிபதி முருகன் அமர்வு கடுமையாகச் சாடியுள்ளது. “லஞ்சம் கொடுத்து வழக்கறிஞர்களாக வர வேண்டுமா?; இவர்கள் நாட்டை காப்பாற்றுவார்களா? அல்லது சட்டத்தைப் பாதுகாப்பார்களா?” என்று தங்களின் கடுமையான அதிருப்தியையும் கேள்வியையும் எழுப்பிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in