LATEST NEWS
“உங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது” விஜய்க்கு ஓட்டு போட்டீங்கள்ல… தமிழக மக்களுக்கு சாபமிட்ட ஆர்.எஸ் பாரதி… பெரும் பரபரப்பு..!!
சென்னையில் நடைபெற்ற மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகழ்வணக்க பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக செய்தித் தொடர்பு முதன்மைச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தமிழக வாக்காளர்களை நோக்கி “உங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது” என மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆலந்தூர் அரசு மருத்துவமனையை திமுக அரசுதான் கொண்டு வந்தது என்று குறிப்பிட்ட அவர், அந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்கள் நடந்து முடிந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தானே வாக்களித்தீர்கள் என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “மக்களுக்கு இனி எதுவும் செய்ய வேண்டாம்; நாம் 5 ஆண்டுகளுக்கு அமைதியாக ஓய்வெடுப்போம்” என்று ஆர்.எஸ். பாரதி பேசிய விதம், அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக தலைவர் விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிறகு திமுக நிர்வாகிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றத்தையே ஆர்.எஸ். பாரதியின் இந்த விரக்தியான பேச்சு வெளிப்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
