LATEST NEWS
“செருப்பு தைக்கப் படிக்க சொல்றவங்களோட என்ன அரசியல் பேசுறது?” – ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை பேச்சு… கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்..!!
தமிழ்நாடு அரசியல் களத்தில் எப்போதும் தனது காட்டமான விமர்சனங்களால் அதிரடி கிளப்பும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எதிர்த்தரப்பினரை நோக்கி வீசியுள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. மேகேதாட்டு அணை விவகாரம் மற்றும் காவிரி நீர் பங்கீடு போன்ற மாநிலத்தின் மிக முக்கியப் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சியினருக்கு எந்தவித அடிப்படைப் புரிதலும் இல்லை என்று அவர் பகிரங்கமாகச் சாடியுள்ளார்.
பாஜகவின் நிர்மல்குமார் போன்றவர்கள் அரசியல் களத்தின் நிதர்சனத்தை உணராமல் பேசி வருவதாகக் குறிப்பிட்ட ஆர்.எஸ்.பாரதி, காவிரி விவகாரத்தின் பின்னணி தெரியாமல் வெறும் விளம்பர அரசியலுக்காக மட்டுமே அவர்கள் கருத்து தெரிவிப்பதாகக் கடுமையாகக் விமர்சித்தார். விஷயமே தெரியாமல் எதையாவது பேசி அரசியலில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகளின் போக்கை அவர் கடுமையாகச் சாடினார்.
அத்துடன், குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் கல்வி குறித்துப் பொறுப்பற்ற கருத்துக்களைக் கூறுபவர்களுடன் விவாதிப்பதே வீண் என்று அவர் தெள்ளத்தெளிவாகத் தெரிவித்தார். சிறுவர்களை மரவேலை மற்றும் காலணி தைக்கும் தொழில்களுக்குச் செல்லப் பரிந்துரைக்கும் குலக்கல்வி மனப்பான்மை கொண்டவர்களிடம் அரசியல் நாகரிகத்தை எதிர்பார்க்க முடியாது என அவர் ஆவேசமாகப் பேசியது தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
