“ஈரானில் அமெரிக்கா அதிரடி வேட்டை..!” 3 மருத்துவமனைகள் மீது அடுத்தடுத்து குண்டுவீச்சு.. இடிபாடுகளில் சிக்கிய உச்ச தலைவர் மொஜ்தபா.. வெளியான அதிர்ச்சி தகவல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஈரானில் அமெரிக்கா அதிரடி வேட்டை..!” 3 மருத்துவமனைகள் மீது அடுத்தடுத்து குண்டுவீச்சு.. இடிபாடுகளில் சிக்கிய உச்ச தலைவர் மொஜ்தபா.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Published

on

அமெரிக்க-இஸ்ரேல் படைகளின் தொடர் வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில், ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பதவியேற்றுள்ள மொஜ்தபா காமேனி தெஹ்ரான் மருத்துவமனை ஒன்றின் இடிபாடுகளில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. சிகிச்சை பெற்று வந்த மூன்று மருத்துவமனைகளையும் குறிவைத்து எதிரி நாடுகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறப்படும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 28 அன்று நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் முன்னாள் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டதை அடுத்து, அவரது மகன் மொஜ்தபா காமேனி மார்ச் 8-ம் தேதி புதிய உச்ச தலைவராக ரகசியமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மொஜ்தபா சிகிச்சைக்காக மாற்றப்பட்ட மூன்று மருத்துவமனைகளைக் குறிவைத்தும் அமெரிக்க-இஸ்ரேல் படைகள் தொடர்ந்து குண்டுவீசித் தாக்கியுள்ளன என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஈரானின் நிபுணர்கள் சபையின் உறுப்பினரான மொஹ்சென் ஹெய்தாரி அல் அரபி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், மொஜ்தபா மூன்றாவது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நடந்த குண்டுவீச்சில், இடிபாடுகளிலிருந்து அவர் மீட்கப்பட்டு ரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், கோமில் உள்ள நிபுணர்கள் சபை செயலகத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சில் 8 பேர் பலியானதாகவும், புதிய உச்ச தலைவர் தேர்வு தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய போர்ச் சூழலைக் கருத்தில் கொண்டு மொஜ்தபா காமேனி மிகவும் ரகசியமான இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தற்பொழுது ஆரோக்கியமாக உள்ளார் என்றும் ஈரானியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in