LATEST NEWS
“முழுமையான அழிவு” மீண்டும் வர 25 வருஷ ஆகும்.. ஈரானுக்கு டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அதிரடி எச்சரிக்கை – பற்றி எரியும் மத்திய கிழக்கு பிராந்தியம்..!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் நாட்டிற்கு “முழுமையான அழிவு” ஏற்படும் என விடுத்துள்ள புதிய எச்சரிக்கை சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டின் எஞ்சிய பகுதிகளை அழிக்கத் தனக்கு விருப்பமில்லை என்றாலும், தற்போதைய சூழ்நிலை காரணமாக அவ்வாறு செய்ய வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், ஈரான் மீண்டு வர 25 ஆண்டுகள் ஆகும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். மேலும், ஈரானுக்கு எதிராகத் தனது அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது குறித்து விரைவில் தெரியவரும் என்றும் அவர் கூறியுள்ளார். ட்ரம்பின் இந்த கடுமையான அறிவிப்பால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
