அரசியல் பூகம்பம்..! அடுத்தடுத்து சிக்கும் முன்னாள் அமைச்சர்கள்… அன்பில் மகேஸைத் தொடர்ந்து துரைமுருகன் மீது பாய்ந்தது வழக்கு – கே.என்.நேருவுக்கும் நெருக்கடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அரசியல் பூகம்பம்..! அடுத்தடுத்து சிக்கும் முன்னாள் அமைச்சர்கள்… அன்பில் மகேஸைத் தொடர்ந்து துரைமுருகன் மீது பாய்ந்தது வழக்கு – கே.என்.நேருவுக்கும் நெருக்கடி..!!

Published

on

திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை ஊழல் வழக்குப்பதிவு செய்துள்ள விவகாரம், அக்கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2021 முதல் 2024 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில், 28 மணல் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடுகள் காரணமாக அரசுக்கு ₹1,427.34 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அவருக்குச் சொந்தமான 34 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடிச் சோதனை நடத்தி, 825 முக்கிய ஆவணங்கள் மற்றும் வங்கி லாக்கர் சாவிகளைக் கைப்பற்றியுள்ளனர்.

இதற்கு முன்பாகவே, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ₹100 கோடிக்கும் மேல் லஞ்ச முறைகேட்டில் ஈடுபட்ட புகாரில் முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட அவரது நீதிமன்றக் காவல் அண்மையில் நீட்டிக்கப்பட்டு, புழல் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதால், அவருக்கு ஜாமீன் வழங்குவதற்கும் நீதிமன்றத்தில் அரசு தரப்பு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது.

Advertisement

அன்பில் மகேஸைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் சிக்கியுள்ள மற்றொரு முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவும் விரைவில் கைது செய்யப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. தன் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி கே.என்.நேரு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதால், அவருக்குச் சட்ட ரீதியான நெருக்கடி அதிகரித்துள்ளது. இத்தகைய இக்கட்டான சூழலில், திமுகவின் பொதுச்செயலாளரான துரைமுருகன் மீதும் தற்போது ₹1,427 கோடி அளவிலான பிரம்மாண்ட மணல் முறைகேடு வழக்கு பாய்ந்துள்ளதால், அவரும் அடுத்த கட்டமாகக் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in