LATEST NEWS
“அடுத்த விக்கெட் அவுட்.?” அன்பில் மகேஸைத் தொடர்ந்து கே.என்.நேருவும் கைது..? சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவால் லஞ்ச ஒழிப்புத்துறை வேட்டை ஆரம்பம்..!!
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நகராட்சி நிர்வாகத்துறையில் 2,538 உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளை நியமிக்க ₹634 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்துவதற்கும், வழக்குப்பதிவு செய்வதற்கும் தடை விதிக்கக் கோரி கே.என்.நேரு தாக்கல் செய்திருந்த மறுஆய்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை அடுத்து, கே.என்.நேருவுக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனைகளைத் தொடங்கியுள்ளதால், அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு அரசியல் வட்டாரத்தில் பரவி வருகிறது.
ஏற்கனவே தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ₹100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில், திமுகவின் மற்றொரு முக்கிய முன்னாள் அமைச்சரான அன்பில் மகேஸ் பொய்யாமொழி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு நவம்பர் 6 வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து தற்போது கே.என்.நேரு மீதான லஞ்ச ஒழிப்புத்துறையின் சட்ட நடவடிக்கை வேகமெடுத்துள்ளதால், அவரும் அன்பில் மகேஸைப் போலவே கைது நடவடிக்கையில் சிக்குவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
