“அடப்பாவி.. வாடகை கேட்டதற்கு இப்படியா…?” 0.32 பிஸ்டலுடன் நுழைந்த வாடகைத் தாரர்.. உரிமையாளர் குடும்பத்தில் 4 பேருக்கு நேர்ந்த கொடூரம்.. திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடப்பாவி.. வாடகை கேட்டதற்கு இப்படியா…?” 0.32 பிஸ்டலுடன் நுழைந்த வாடகைத் தாரர்.. உரிமையாளர் குடும்பத்தில் 4 பேருக்கு நேர்ந்த கொடூரம்.. திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

அசாம் மாநிலம் கவுகாத்தியின் உலுபரி பகுதியில் உள்ள ‘ஹோட்டல் பிலாஸ் இன்’ வளாகத்தில், சொத்து மற்றும் குத்தகை ஒப்பந்தத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவு 9 மணியளவில் கனகாந்த கோகோய் என்ற நபர், தனது உரிமம் பெற்ற 0.32 பிஸ்டல் துப்பாக்கியுடன் உலுபரி சந்துக்குள் நுழைந்துள்ளார். அங்கு முதலில் இரண்டு பேரைச் சுட்ட அவர், பின்னர் ஹோட்டலுக்குள் புகுந்து அதன் உரிமையாளரான ஹெலினா பரலி, அவரது சகோதரர் பூதேவ் பரலி, ஹெலினாவின் மகன் டெபார்ஷி மற்றும் மருமகள் ரினிகி ஆகியோரை சரமாரியாகச் சுட்டுத் தள்ளியுள்ளார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர்; டெபார்ஷி-ரினிகி தம்பதியரின் மரணத்தால் அவர்களது இரு குழந்தைகளும் ஆதரவற்றோராக நடுத்தெருவில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தக் கொடூரச் செயலுக்கு ஹோட்டல் குத்தகை மற்றும் வாடகை நிலுவைத் தொகை தொடர்பான நீண்ட நாள் தகராறே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த ஹோட்டலை ஹெலினாவிடமிருந்து குத்தகைக்கு எடுத்திருந்த கனகாந்த கோகோய், வாடகை தராமல் இழுத்தடித்து வந்ததாகவும், அதுகுறித்து பேச வந்தபோதே இந்த விபரீதம் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்திய சில மணி நேரங்களிலேயே குற்றவாளி கனகாந்த கோகோயை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இந்த ஹோட்டல் சொத்து தொடர்பாக ஏற்கனவே பலமுறை சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இந்தச் சொத்து ஹெலினாவுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல என்றும், அவரது உடன்பிறப்புகள் மற்றும் உறவினர்களுக்கும் இதில் பங்கு உள்ளது என்றும் ஹெலினாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in