“₹10 லட்சத்துக்கு மேல் கொடுத்தா தான் சீட்…” உள்ளாட்சி தேர்தலில் தவெக மாவட்ட செயலாளர் டெண்டர் பேரம்..? கரூர் தவெக மா.செ.வின் சர்ச்சை ஆடியோவால் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“₹10 லட்சத்துக்கு மேல் கொடுத்தா தான் சீட்…” உள்ளாட்சி தேர்தலில் தவெக மாவட்ட செயலாளர் டெண்டர் பேரம்..? கரூர் தவெக மா.செ.வின் சர்ச்சை ஆடியோவால் பரபரப்பு..!!

Published

on

தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன்பேசியதாகக் கூறப்படும் சர்ச்சை ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் சீட் ஒதுக்கீட்டிற்காகப் பேரம் பேசும் வகையில் அந்த ஆடியோவின் உரையாடல் அமைந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் அந்த ஆடியோ பதிவில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ₹10 லட்சத்திற்கும் அதிகமாகப் பணம் கொடுப்பவர்களின் பெயர்களை மட்டும் தனியாக எழுதி ஒரு பெட்டியில் போடுவோம் என்று கூறப்பட்டுள்ளது. அதன் பின்னர், அமைச்சர் ஆனந்தை வைத்து அந்தப் பெயர்களை எடுக்கச் சொல்லி, யாருக்கு எந்தப் பதவி என்பதை முடிவு செய்வோம் என டெண்டர் விடுவது போன்ற தொனியில் அந்தப் பேச்சு இடம்பெற்றுள்ளது.

Advertisement

இந்த விவகாரம் தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தன் மீதான புகாரை மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட யாரிடமும் பணம் பெறுவது தொடர்பாகத் தான் பேசவில்லை என்றும், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஆடியோவில் இருப்பது தனது குரல் அல்ல என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in