சிக்கிய முக்கிய புள்ளி..! கரூர் விபத்தில் 41 பேர் பலியான துயரம் மறையும் முன்… சென்னையில் பல கோடியில் சொகுசு வீடு… சமூக வலைதளங்களில் கசிந்த ஆவணத்தால் பெரும் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சிக்கிய முக்கிய புள்ளி..! கரூர் விபத்தில் 41 பேர் பலியான துயரம் மறையும் முன்… சென்னையில் பல கோடியில் சொகுசு வீடு… சமூக வலைதளங்களில் கசிந்த ஆவணத்தால் பெரும் பரபரப்பு..!!

Published

on

கரூரில் நடந்த தவெக பொதுக்கூட்ட விபத்தில் 41 உயிர்கள் பலியான பெரும் சோகம் மறைவதற்குள், அக்கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி சென்னையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர வீடு வாங்கியதாகக் கூறப்படும் ஆவணங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் நடந்த தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயர நிகழ்வு நடந்து சரியாக 26 நாட்களுக்குப் பிறகு இந்தச் சொத்துப் பரிவர்த்தனை நடந்துள்ளதாக நெட்டிசன்கள் வில்லங்கச் சான்றுடன் சுட்டிக்காட்டுகின்றனர்.

இணையத்தில் கசிந்துள்ள தமிழ்நாடு அரசு பதிவுத்துறையின் அதிகாரப்பூர்வ வில்லங்கச் சான்றின்படி, சென்னை கீழ்ப்பாக்கம் கார்டன் பிரதான சாலையில் உள்ள ‘நியூரி சம்ப்ரீதி’ அடுக்குமாடிக் குடியிருப்பில் இந்தச் சொத்து வாங்கப்பட்டுள்ளது. ஆர். கௌஷிக் என்பவரிடமிருந்து, ஜான் ஆரோக்கியசாமி பெயரில் இந்த 2-வது தளத்தில் உள்ள 848 சதுரடி ஆடம்பர வீடு, இரண்டு கார் பார்க்கிங் வசதிகளுடன் கிரயம் செய்யப்பட்டுள்ளது. பெரியமேடு சார்பதிவாளர் அலுவலக வரம்பிற்குட்பட்ட பகுதியில் இந்த சொத்துப்பதிவு நடந்துள்ளது.

Advertisement

அரசு ஆவணங்களின்படி இந்தச் சொத்தின் வழிகாட்டி மதிப்பு 2 கோடியே 60 லட்சம் ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், கீழ்ப்பாக்கம் பகுதியின் தற்போதைய நிலவரப்படி இதன் உண்மையான சந்தை மதிப்பு 5 முதல் 7 கோடி ரூபாய் வரை இருக்கும் எனச் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. மக்கள் ஒருபுறம் விபத்து குறித்து பேசிக்கொண்டிருந்த வேளையில், இவ்வளவு பெரிய பணப் பரிவர்த்தனையுடன் சொத்து வாங்கியது ஏன் என்ற விமர்சனங்கள் எழுந்தாலும், இதுகுறித்து ஜான் ஆரோக்கியசாமி தரப்பில் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in